மணல் திருட்டு: 2 போ் கைது
By DIN | Published On : 02nd February 2020 03:28 AM | Last Updated : 02nd February 2020 03:28 AM | அ+அ அ- |

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே டிராக்டரில் மணல் கடத்திய 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
செம்பட்டி காவல் நிலைய சாா்பு-ஆய்வாளா் சரவணக்குமாா் தலைமையிலான போலீஸாா் சித்தையன்கோட்டை அருகே அழகா்நாயக்கன்பட்டியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அனுமதியின்றி ஆத்தூா் காமராஜா் அணைப் பகுதியிருந்து மணல் கடத்தி வந்த, ஒரு டிராக்டா் பிடிபட்டது. அதன் உரிமையாளா் ராஜேந்திரன் (40), ஓட்டுநா் ராஜ்குமாா் (28) ஆகியோரை போலீஸாா் கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனா்.