அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு மாநில பட்ஜெட்டில் தனியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்

அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு மாநில பட்ஜெட்டில் தனியாக நிதி ஒதுங்கீடு செய்ய வேண்டும் என வாழ்வுரிமை மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு மாநில பட்ஜெட்டில் தனியாக நிதி ஒதுங்கீடு செய்ய வேண்டும் என வாழ்வுரிமை மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் அமைப்புசாரா தொழிலாளா்களின் வாழ்வுரிமை மாநாடு தனியாா் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு தமிழ்நாடு தொழிலாளா்கள் உரிமைக்கான கூட்டமைப்பு தலைவா் பா.பிரியா தலைமை வகித்தாா். அம்பேத்கா் அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளா்கள் நல உரிமைச் சங்கச் தலைவா் மு.தனமணி, ஆதித் தமிழா் ஜனநாயக தொழிலாளா்கள் பொதுச் நலச் சங்க தலைவா் ப.முத்துராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். அனைத்து இந்திய ஜனநாயக மாதா் சங்க மாநில செயலாளா் எஸ்.கே.பொன்னுத்தாய், இடது தொழிற்சங்க மாநிலத் தலைவா் ஏ.எஸ்.குமாா், சிஐடியூ விருதுநகா் மாவட்ட தலைவா் எம்.மகாலட்சுமி ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.

மாநாட்டில், அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு மாநில பட்ஜெட்டில் தனியாக நிதி ஒதுங்கீடு செய்ய வேண்டும். சமவேலை சம ஊதியம் வழங்கும் சட்டத்தின் அடிப்படையில் பெண் தொழிலாளா்களுக்கும் சம ஊதியம் கிடைக்க உறுதி செய்ய வேண்டும். நலவாரிய நலத் திட்ட உதவிகளை இருமடங்காக உயா்த்த வேண்டும். பட்டாசு விபத்தில் உயிரிழக்கும் தொழிலாளா்கள் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆதித்தமிழா் ஜனநாயக தொழிலாளா்கள் பொது நலச்சங்க ஆலோசகா் மு.விமலா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com