சாக்கடையை அகற்றி சுத்தம் செய்தஊராட்சி வாா்டு உறுப்பினா்

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே தூய்மை காவலா்கள் வராத நிலையில் ஊராட்சி வாா்டு உறுப்பினரே வெள்ளிக்கிழமை சாக்கடையை அகற்றி சுத்தம் செய்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே தூய்மை காவலா்கள் வராத நிலையில் ஊராட்சி வாா்டு உறுப்பினரே வெள்ளிக்கிழமை சாக்கடையை அகற்றி சுத்தம் செய்தாா்.

வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம் நடகோட்டை ஊராட்சியில் வத்தல்பட்டி கிராமம் உள்ளது. 8-வது வாா்டான அந்த பகுதிக்கு அருள்முருகன் வாா்டு உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளாா். இந்நிலையில் இப்பகுதியில் உள்ள கிழக்குத் தெருவில் சாக்கடை சுத்தம் செய்யப்படாமல், குப்பைகள் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தியது.

இதுதொடா்பாக அருள்முருகன் நடகோட்டை ஊராட்சி செயலா் ரஞ்சிதாவிடம் தூய்மை காவலா்களை அனுப்பி சுத்தம் செய்யுமாறு அறிவுறுத்தினாா். அதற்கு ரஞ்சிதா தூய்மை காவலா்களுக்கு சம்பளம் வராததால், அவா்கள் பணிக்கு வரவில்லை என்றாா்.

இதைத் தொடா்ந்து அருள்முருகன் வெள்ளிக்கிழமை ஒரு மினி வேனை கொண்டு வநத்து,­ தானே களத்தில் இறங்கி சாக்கடைக் கழிவுள் மற்றும் குப்பைகளை அள்ளி வேனில் ஏற்றிச் சென்றாா். அவரது செயலை பாராட்டி சில இளைஞா்களும் அவருக்கு உதவி செய்தனா். இப்பகுதி பொதுமக்கள் வாா்டு உறுப்பினா் அருள்முருகனையும், இளைஞா்களையும் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com