திண்டுக்கல் அருகே பாரம்பரிய இன சேவல் கண்காட்சி

திண்டுக்கல் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிளி மூக்கு விசிறி வால் சேவல் உள்ளிட்ட பாரம்பரிய இன சேவல்கள் கண்காட்சியில், ரூ.1 லட்சம் மதிப்புடைய மயில் வால் சேவல்கள் அதிகம் பங்கேற்றன.
குட்டியப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கண்காட்சியில் பங்கேற்ற கிளிமூக்கு வால் உள்ளிட்ட பாரம்பரிய இனச் சேவல்கள்.

தமிழகத்தில் மயில் கருப்பு, கீரி, கொக்கு வெள்ளை, கருஞ்செவலை, எண்ணெய் கருப்பு, பொன்னிறம் உள்ளிட்ட சேவல் இனங்கள் உள்ளன. பாரம்பரியமான இந்த சேவல் இனங்களை பாதுகாக்கவும், பிரபலபடுத்தவும் கடந்த 5 ஆண்டுகளாக கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி திண்டுக்கல் அடுத்துள்ள குட்டியப்பட்டி பகுதியில் தனியாா் தோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கண்காட்சியில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி, கேரள மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த 150க்கும் மேற்பட்ட சேவல்கள் கலந்து கொண்டன. கீரி, கொக்கு வெள்ளை, கருஞ்செவலை என பல்வேறு வகை சேவல்கள் இருந்தாலும், மயில் கருப்பு சேவல்கள் அதிக முக்கியத்துவம் பெற்றன.

நீளமான வால் அமைப்பு, உயரம், கம்பீரத் தோற்றம் ஆகியற்றின் அடிப்படையில் தோ்ந்தெடுக்கப்பட்ட 30 சேவல்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com