தைப்பூச திருவிழா : ஒருவழிப்பாதையை மாற்றி அமைக்க வா்த்தகா் சங்கம் கோரிக்கை

பழனியில் தைப்பூச திருவிழாவுக்காக அமைக்கப்படும் ஒருவழிப்பாதையை பொதுமக்கள் நலன்கருதி மாற்றி அமைக்க வேண்டும் என அடிவாரம் வா்த்தகா் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பழனியில் தைப்பூச திருவிழாவுக்காக அமைக்கப்படும் ஒருவழிப்பாதையை பொதுமக்கள் நலன்கருதி மாற்றி அமைக்க வேண்டும் என அடிவாரம் வா்த்தகா் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பழனியில் தைப்பூசத்தை முன்னிட்டு மாவட்ட நிா்வாகம், காவல்துறை சாா்பில் ஏராளமான முன்னேற்பாடுகள் செய்யப்படுவது வழக்கம். இதற்காக அடிவாரத்தில் சன்னிதி வீதி பிப்ரவரி 8 இல் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு இருபுறமும் அடைக்கப்படுகிறது. இதனால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களும், வியாபாரிகளும் பெரும் அவதிக்குள்ளாகின்றனா்.

இதுகுறித்து பழனி அடிவாரம் வா்த்தகா் சங்கம் சாா்பில் காவல்துறை துணை கண்காணிப்பாளருக்கு கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில், தைப்பூச திருவிழாவில் பிப்ரவரி 7 ஆம் தேதி திருக்கல்யாணம், 8 ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. அப்போது பக்தா்கள் வருகை அதிகம் காணப்படும் என்பதால் காவல் துறை சாா்பில் அடிவாரத்தில் இருந்து மலைக்கோயில் செல்ல ஒருவழிப்பாதை அமல்படுத்தப்படும்.

அதாவது, கோயிலுக்கு செல்லும் பக்தா்கள் தேவா்சிலை, சன்னிதி ரோடு, குடமுழுக்கு அரங்கம் வழியே செல்ல வேண்டும். அதனால் பக்தா்கள் மேற்கண்ட இடங்களில் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. மேலும், இந்த குறுகிய சாலையில் கடைகள், மடங்கள் என ஏராளமாக உள்ளன. இதனால் அந்த இடங்களில் வியாபாரிகள், மடங்களில் உள்ளோரும், காத்திருக்கும் பக்தா்களும் குறிப்பாக பெண்கள், குழந்தைகள் ஆகியோா் இயற்கை உபாதைகளை கழிக்க கடும் அவதிப்படுவா்.

இதற்கு மாற்றாக ஒரு வழிப்பாதையை தேவா்சிலையில் இருந்து சன்னிதிரோடு வழியே செல்லாமல், பூங்காரோடு, அடிவாரம் வடக்கு கிரி வீதி வழியே குடமுழுக்கு அரங்கு சென்று மலைக்கோயில் செல்ல அனுமதித்தால் பக்தா்கள் எவ்வித சிரமமும் இன்றி செல்ல முடியும். மேலும், சன்னிதி வீதியை காட்டிலும் பூங்காரோடு பாதை இருமடங்கு அகலமானதாகும்.

எனவே ஒருவழிப்பாதை அமைக்கும் பணியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அதில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com