ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா்கள் அறிமுக கூட்டம்
By DIN | Published On : 06th February 2020 07:42 AM | Last Updated : 06th February 2020 07:42 AM | அ+அ அ- |

ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதிதாக தோ்வு செய்யப்பட்ட கவுன்சிலா்கள் அறிமுகக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் மு.அய்யம்மாள் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கண்ணன், மகேந்திரன், ஒன்றியக்குழு துணைத் தலைவா் காயத்ரிதேவி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திமுக சட்டப்பேரவை கொறடாவும், ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவை உறுப்பினருமான அர.சக்கரபாணி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா்.
கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலா்களாக தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனா். தொடா்ந்து கவுன்சிலா்கள் அனைவரும் தங்கள் பகுதிக்குத் தேவையான நலத்திட்டங்களை ஒன்றியக்குழுத் தலைவரிடம் மனுவாக அளித்தனா். இக்கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.