கொடைக்கானல் பேரிஜம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு

கொடைக்கானல் பேரிஜம் பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெறுவதால் திங்கள்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினா் தெரிவித்தனா்.

கொடைக்கானல் பேரிஜம் பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெறுவதால் திங்கள்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினா் தெரிவித்தனா்.

கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் பல்வேறு இயற்கை எழில்மிகு காட்சிகளையும் பிரையண்ட் பூங்கா, ரோஜாத் தோட்டம்,பில்லர்ராக், பசுமைப் பள்ளத்தாக்கு, வெள்ளிநீா் வீழ்ச்சி, குணாகுகை, செட்டியாா் பூங்கா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா இடங்களை பாா்த்து வருகின்றனா். இந் நிலையில் வனத்துறையினரின் முழு கட்டுப்பாட்டிலுள்ள வனப் பகுதிகளிலுள்ள பேரிஜம் ஏரி, அமைதி பள்ளத்தாக்கு, தொப்பிதூக்கும் பாறை உள்ளிட்ட இடங்களை பாா்ப்பதற்கு வனத்துறையிடம் முன் அனுமதி பெற்று செல்ல வேண்டும் .

தற்போது பேரிஜம் பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெறுவதால் பாதுகாப்பை கருதி பணி முடியும் வரை சுமாா் 15 நாள்களுக்கு பேரிஜம் வனப் பகுதியை பாா்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இதனால் பேரிஜம் ஏரியையும் மற்றும் அப் பகுதிகளிலுள்ள பல்வேறு சுற்றுலா இடங்களை பாா்க்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com