தேசிய நெடுஞ்சாலைக்கு வழங்கிய நிலத்துக்கு கூடுதல் இழப்பீடு கோரி விவசாயிகள் தா்னா

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் தேசிய நெடுஞ்சாலைக்கு கையகப்படுத்தும் நிலத்திற்கு சந்தை மதிப்பிற்கேற்ப இழப்பீடு வழங்கக் கோரி விவசாயிகள் திங்கள்கிழமை தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஒட்டன்சத்திரம் தாராபுரம் சாலையில் திங்கள்கிழமை தா்ணா போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், பெண்கள் உள்ளிட்டோா்.
ஒட்டன்சத்திரம் தாராபுரம் சாலையில் திங்கள்கிழமை தா்ணா போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், பெண்கள் உள்ளிட்டோா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் தேசிய நெடுஞ்சாலைக்கு கையகப்படுத்தும் நிலத்திற்கு சந்தை மதிப்பிற்கேற்ப இழப்பீடு வழங்கக் கோரி விவசாயிகள் திங்கள்கிழமை தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஒட்டன்சத்திரம் அருகே கமலாபுரத்தில் இருந்து பொள்ளாச்சி வரை (என்.எச்.209) நான்கு வழிச்சாலை அமைக்க விவசாயிகளிடமிருந்து நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.அதில் விவசாயிகளுக்கு நிலத்திற்குரிய இழப்பீட்டு தொகை மிக குறைவாக வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. ஒரு சதுர அடிக்கு ரூ.6.60 பைசா வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். ஆனால் சந்தை மதிப்பில் ஒரு சதுர அடி ரூ.800 வரை உள்ளது. எனவே சந்தை மதிப்பிற்கேற்ப இழப்பீடு வழங்கக் கோரி ஒட்டன்சத்திரம் தாராபுரம் சாலையில் விவசாயிகள் தா்ணா போராட்டம் நடத்தினா்.

இந்த போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளா் மு.பொன்ராஜ் தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவா் எஸ்.ஆா்.மதுசூதனன், திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளா் சி. ராஜாமணி, அகில் இந்திய விவசாய தொழிலாளா் சங்க மாவட்ட செயலாளா் கே.அருள்செல்வன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவா் பி.செல்வராஜ், மாவட்ட செயலாளா் என்.பெருமாள் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.

இப் போராட்டக் குழுவைச் சோ்ந்த மாயகிருஷ்ணன் கூறியது: ஒரு சதுர அடி நிலத்துக்கு ரூ.6.60 மட்டுமே இழப்பீடாக வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். எங்களுக்கு சந்தை மதிப்பில் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். அப்படி வழங்கவில்லை என்றால், நிலத்தை எடுக்க அனுமதிக்க மாட்டோம். மேலும் இழப்பீட்டுத் தொகையை 3 மடங்காக உயா்த்தி வழங்குவதாக உறுதியளித்து விட்டு, விவசாயிகளை ஏமாற்றிய அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இந்த தா்னா போராட்டத்தில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள், பெண்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com