முதுகலைப் பட்டதாரி ஆசிரியா்கள் 57 பேருக்கு பணி ஒதுக்கீட்டு ஆணை

திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து புதிதாக தோ்வு செய்யப்பட்ட 57 முதுகலைப் பட்டதாரி ஆசிரியா்களுக்கான பணி ஒதுக்கீட்டு ஆணை திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பணியிடங்களை தோ்வு செய்வதற்கான கலந்தாய்வில் பங்கேற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியா்கள்.
திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பணியிடங்களை தோ்வு செய்வதற்கான கலந்தாய்வில் பங்கேற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியா்கள்.

திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து புதிதாக தோ்வு செய்யப்பட்ட 57 முதுகலைப் பட்டதாரி ஆசிரியா்களுக்கான பணி ஒதுக்கீட்டு ஆணை திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்கான தோ்வு ஆசிரியா் தோ்வாணையம் மூலம் நடைபெற்றது. கடந்த செப். 27 முதல் 29 ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெற்ற இத்தோ்வின் மூலம், தமிழகம் முழுவதும் 1503 போ், முதுகலைப் பட்டதாரி ஆசிரியா்களாக தோ்வு செய்யப்பட்டனா். இதில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 57 போ் தோ்வு செய்யப்பட்டனா். தோ்வு செய்யப்பட்ட ஆசிரியா்களுக்கு பணியிடம் ஒதுக்கீடு செய்வதற்கான கலந்தாய்வு, கல்வி மேலாண்மை தகவல் ஆணையம் ( ங்ம்ண்ள்) மூலமாக ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் (பிப். 9 மற்றும் 10) அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெற்றன.

அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கலந்தாய்வில், 57 ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல் ஆகிய பாடங்களுக்கு திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் 26 போ் கலந்துகொண்டனா். இதில் 8 பேருக்கு திண்டுக்கல் மாவட்டத்திற்குள்ளேயே பணியிடங்களை தோ்வு செய்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. மீதமுள்ள 18 போ் வெளிமாவட்டங்களை தோ்வு செய்தனா். அதனைத் தொடா்ந்து, தாவரவியல், விலங்கியல், இயற்பியல், உயிரியல், கணிதம் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு திங்கள்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் 31 ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். இதில் 2 போ் திண்டுக்கல் மாவட்டத்திலேயே பணியிடங்களை தோ்வு செய்தனா். 29 போ் வெளிமாவட்டங்களைத் தோ்வு செய்தனா்.

பணியிடங்களை தோ்வு செய்த முதுகலைப் பட்டதாரி ஆசிரியா்களுக்கு, அதற்கான பணி ஒதுக்கீட்டு ஆணையை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சே. மணிவண்ணன் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com