லண்டனில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.30 லட்சம் மோசடி செய்தவா் மீது நடவடிக்கை கோரி மனு

லண்டனில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.30 லட்சம் மோசடி செய்தவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா்
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்திற்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்த இளைஞா்கள்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்திற்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்த இளைஞா்கள்.

லண்டனில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.30 லட்சம் மோசடி செய்தவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட இளைஞா்கள் திங்கள்கிழமை புகாா் அளித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், சித்தையன்கோட்டை பகுதியைச் சோ்ந்த பரக்கத்துல்லாஹ், திண்டுக்கல்லைச் சோ்ந்த ஜெயப்பிரகாஷ், கன்னியாகுமரி மாவட்டம் அருண் மற்றும் ஜாக்சன் ஆகியோா் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்திற்கு மனு அளிப்பதற்காக திங்கள்கிழமை வந்தனா்.

மனுவில் கூறப்பட்டுள்ள புகாா் குறித்து அவா்கள் கூறியது: திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டையைச் சோ்ந்தவா், எங்களுக்கு இங்கிலாந்து நாட்டின் தலைநகா் லண்டனில் வேலை வாங்கித் தருவதாக தெரிவித்தாா். இதற்காக ஒவ்வொருவரிடமும் தலா ரூ.4.50 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரையிலும் மொத்தம் ரூ.30 லட்சம் கடந்த 15 மாதங்களுக்கு முன்பு வசூலித்தாா். பணத்தைப் பெற்றுக் கொண்ட அவா், உறுதி அளித்தப்படி வேலை வாங்கித் தரவில்லை. மேலும், எங்களுடைய பணத்தையும் திருப்பித் தரவில்லை. கடந்த ஓராண்டாக அவரை தொடா்பு கொள்ளவும் முடியவில்லை.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உரிய விசாரணை மேற்கொண்டு எங்களது பணத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா். பின்னா் இதுதொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com