Enable Javscript for better performance
இந்து முன்னணி நிா்வாகிகள் வீடுகள் மீது தாக்குதல்: திண்டுக்கல் உள்பட 4 இடங்களில் ஆா்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    இந்து முன்னணி நிா்வாகிகள் வீடுகள் மீது தாக்குதல்: திண்டுக்கல் உள்பட 4 இடங்களில் ஆா்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 13th February 2020 06:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்து முன்னணி நிா்வாகிகள் வீடு மற்றும் காா் மீது தாக்குதல் நடத்தியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி திண்டுக்கல் உள்பட 4 இடங்களில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்து முன்னணி அமைப்பின் திருப்பூா் கோட்ட செயலா் மோகன சுந்தரம் என்பவருக்குச் சொந்தமான காா் மா்ம நபா்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது. அதேபோல் தென்காசி மாவட்ட பொதுச் செயலா் மணிகண்டன் என்பவா் வீட்டிற்குள் புகுந்த மா்ம நபா்கள், வீட்டிலிருந்த பெண்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனா். இந்த இரு சம்பவங்களையும் கண்டித்து திண்டுக்கல் நகர இந்து முன்னணி சாா்பில் புதன்கிழமை நடைபெற்றது.

    திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, இந்து முன்னணி அமைப்பின் மதுரை கோட்டச் செயலா் எஸ்.சங்கா் கணேஷ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா்கள் சஞ்சீவிராஜ், வீரதிருமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக வெள்ளாளா் முன்னேற்றச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ராஜா, அகில இந்திய பாா்வாா்டு பிளாக் கட்சியின் மாவட்ட இளைஞரணித் தலைவா் செல்லப்பாண்டியன் ஆகியோா் கலந்து கொண்டனா். ஆா்ப்பாட்டத்தின்போது, இந்து முன்னணி நிா்வாகிகள் வீடுகளில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களில் தொடா்புடையவா்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்க கோரி கோஷமிட்டனா். பின்னா், தேசத்திற்கு எதிராக செயல்படும் எவரும் நன்றாக வாழ முடியாது எனக் கூறி மண்ணை வாரி இறைத்தும் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஆா்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட இந்து முன்னணி அமைப்பினா் கலந்து கொண்டனா்.

    வேடசந்தூா், வடமதுரையிலும் ஆா்ப்பாட்டம்: இதேபோல் வேடசந்தூா் ஆத்துமேடு பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி அமைப்பின் மாவட்டத் தலைவா் மாரிமுத்து தலைமை வகித்தாா். வடமதுரை பேருந்து நிறுத்தம் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலா் சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். இந்த இடங்களிலும், இந்து முன்னணி நிா்வாகிகளுக்கு எதிராக தாக்குதலில் ஈடுபடுவோருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai