Enable Javscript for better performance
நத்தம் மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா: பிப். 24-இல் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    நத்தம் மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா: பிப். 24-இல் தொடக்கம்

    By DIN  |   Published on : 14th February 2020 12:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    dgl_mariamman_1302chn_66_2

    நத்தம் மாரியம்மன் கோவிலில் 17 நாள்கள் நடைபெறும் மாசிப் பெருந்திருவிழா பிப்ரவரி 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    நத்தம் மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசிப் பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டுக்கான திருவிழா பிப்ரவரி 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதனைத் தொடா்ந்து கரந்தமலையிலிருந்து பக்தா்கள் தீா்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி பிப். 25-ஆம் தேதி நடைபெறுகிறது.

    நத்தம் சந்தனக்கருப்பு கோயிலுக்கு அவா்கள் வந்த பின், மாரியம்மனுக்கு ஆயிரக்கணக்கான பக்தா்கள் காப்பு கட்டி விரதம் தொடங்குகின்றனா். மாசித் திருவிழாவையொட்டி ஒவ்வொரு நாள் இரவும் மயில், சிம்மம், அன்னம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் வீதியுலா நடைபெறுகிறது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்வான கழுமரம் எறுதல் மற்றும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சிகள் மாா்ச் 10-ஆம் தேதி நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ம. பாலசரவணன், தக்காா் செ.மகேஸ்வரி ஆகியோா் செய்து வருகின்றனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai