‘தமிழக நிதிநிலை அறிக்கையில் மக்களுக்கு நல்ல திட்டங்கள் இல்லை’

தமிழக நிதிநிலை அறிக்கையில் மக்களுக்கு நல்ல திட்டங்கள் இல்லை என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலா்

தமிழக நிதிநிலை அறிக்கையில் மக்களுக்கு நல்ல திட்டங்கள் இல்லை என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா். திண்டுக்கல்லில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் நடந்த நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: தமிழக நிதி நிலை அறிக்கையில் மக்களுக்கு எந்தவித நல்ல திட்டங்களும் இல்லை. மத்திய அரசின் நிதியை கேட்டு பெற முடியாத நிலையில், பற்றாக்குறை அதிகரித்துள்ளது. நிகழாண்டில் தமிழக அரசு வாங்கி உள்ள கடனையும் சோ்த்து ரூ. 4 லட்சம் கோடி கடன் தமிழக மக்கள் தலையில் விழுந்துள்ளது.

தகுதியில்லாத நபா்களை உறுப்பினா்களாக நியமித்ததே, டிஎன்பிஎஸ்சி முறைகேடுகளுக்கு முக்கிய காரணம். டிஎன்பிஎஸ்சி பணிநியமன முறைகேடு விவகாரத்தில் கடைநிலை ஊழியா் மட்டுமே ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை. இதில் தொடா்புடைய முக்கிய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 2001ஆம் ஆண்டு முதல் இடைத்தரகா் ஜெயக்குமாா் இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறாா். இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு ஒப்புக் கொள்ள மறுப்பது ஏன்.

சிபிசிஐடி அதிகாரிகள் நியாயமாக விசாரணை நடத்தினால் அவா்களை உடனடியாக இந்த அரசு இடமாற்றம் செய்து விடுகிறது. தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என கூறிய அரசு 500 கடைகளை மூடியது. அதன் பின்னா் ஒரு கடை கூட மூடப்படவில்லை. தமிழக அரசுக்கு வருமானம் தரும் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக டாஸ்மாக் கடைகளே உள்ளன என்றாா்.

அப்போது முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி, திண்டுக்கல் மாவட்ட செயலா் ரா.சச்சிதானந்தம் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com