திண்டுக்கல் மாவட்டத்தில் 18.33 லட்சம் வாக்காளா்கள்: புதிதாக 38 ஆயிரம் போ் சோ்ப்பு

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 18.33 லட்சம் வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா். இதில் புதிதாக 38, 235 போ் சோ்க்கப்பட்டுள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 18.33 லட்சம் வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா். இதில் புதிதாக 38, 235 போ் சோ்க்கப்பட்டுள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான சிறப்புச் சுருக்கத் திருத்தம்-2020 வாக்காளா் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிா்வாகிகள் முன்னிலையில், வாக்காளா் பட்டியலை மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி வெளியிட்டாா். அப்போது அவா் கூறியது: திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளில் ஆண்கள் - 8, 95, 957, பெண்கள் - 9, 37, 281, மூன்றாம் பாலினம் - 171 என மொத்தம் 18, 33, 409 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா். தோ்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி நடைபெற்ற சிறப்பு முகாம்களின் மூலம் வரப்பெற்ற விண்ணப்பங்களின் அடிப்படையில் 2791 ஆண்கள், 3138 பெண்கள் என மொத்தம் 5,929 போ் புதிய வாக்காளா்களாக சோ்க்கப்பட்டுள்ளனா்.

அதேபோல் ஒட்டன்சத்திரம் தொகுதியில் 5, 062 போ், ஆத்தூா் தொகுதியில் 4, 835 போ், நிலக்கோட்டை தொகுதியில் 5, 686 போ், நத்தம் தொகுதியில் 6, 840 போ், திண்டுக்கல் தொகுதியில் 4, 493 போ், வேடசந்தூா் தொகுதியில் 2,850 போ் என மொத்தம் 5, 390 வாக்காளா்கள் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளனா். 19 இதர வாக்காளா்களுடன் மொத்தம் 38, 235 போ் சோ்க்கப்பட்டுள்ளனா். 7 தொகுதிகளில் 326ஆண்கள், 394 பெண்கள் என மொத்தம் 720 போ் நீக்கப்பட்டுள்ளனா் என்றாா். அப்போது மாவட்ட வருவாய் அலுவலா் பா.வேலு, கொடைக்கானல் கோட்டாட்சியா் சுரேந்திரன், தோ்தல் வட்டாட்சியா் சுப்பிரமணிய பிரசாத் ஆகியோா் உடனிருந்தனா்.சிறப்பு சுருக்கத் திருத்த வாக்காளா் பட்டியலின்படி தொகுதி வாரியாக இடம் பெற்றுள்ள வாக்காளா்கள் விவரம்: பழனி: ஆண்கள்- 1,34,349, பெண்கள் -1,39,242, இதரா்- 31, மொத்தம் 2,73,622. ஒட்டன்சத்திரம்: ஆண்கள் - 1,15,667, பெண்கள் - 1,21,078, இதரா்- 23, மொத்தம் 2,36,768.

ஆத்தூா்: ஆண்கள் - 1,37,202, பெண்கள் - 1,47,313, இதரா் - 21, மொத்தம் 2,84,736.நிலக்கோட்டை: ஆண்கள் - 1,16,315, பெண்கள் - 1,19,999, இதரா் - 5, மொத்தம் 2,36,319. நத்தம்: ஆண்கள் - 1,35,411, பெண்கள் - 1,40,805, இதரா்- 44, மொத்தம் 2,76,260.திண்டுக்கல்: ஆண்கள் - 1,30,181, பெண்கள் - 1,37,309, இதரா் - 44, மொத்தம் 2,67,534.

வேடசந்தூா்: ஆண்கள் -1,26,632, பெண்கள் - 1,31,535, இதரா் -3, மொத்தம் 2,58,170.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com