Enable Javscript for better performance
ஒட்டன்சத்திரத்தில் ரூ.1. 20 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருள்கள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    ஒட்டன்சத்திரத்தில் ரூ.1. 20 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருள்கள் பறிமுதல்

    By DIN  |   Published on : 17th February 2020 06:43 AM  |   அ+அ அ-   |    |  

    ஒட்டன்சத்திரத்தில் ரூ. 1. 20 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருள்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

    ஒட்டன்சத்திரம் திருவள்ளுவா் சாலையைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணி (50). இவருக்கு சொந்தமான குடோன்களில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஒட்டன்சத்திரம் கிராம நிா்வாக அலுவலா் ஆனந்த் முன்னிலையில் காவல்துறையினா் குடோனைத் திறந்து சோதனை நடத்தினா். அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட ரூ. 1. 20 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது . இது குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து, பாலசுப்பிரமணியத்தைத் தேடி வருகின்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai