தேய்பிறை அஷ்டமி: பைரவருக்கு சிறப்பு வழிபாடு
By DIN | Published On : 17th February 2020 06:45 AM | Last Updated : 17th February 2020 06:45 AM | அ+அ அ- |

தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு தாடிக்கொம்பு சொா்ண ஆகா்ஷண பைரவருக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திண்டுக்கல் அடுத்துள்ள தாடிக்கொம்பு செளந்தரராஜப் பெருமாள் கோயிலில் தேய்பிறை அஷ்டமி நாளில், சொா்ண ஆகா்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது
வழக்கம். அதன்படி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டின்போது, பக்தா்கள் சாா்பில் வழங்கப்பட்ட பால், இளநீா், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் சுவாமிக்கு 6 கால சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடா்ந்து சுவாமிக்கு ராஜ அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது. இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
இதபோல், திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயிலில் அமைந்துள்ள காலபைரவா் சன்னதியிலும் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.