பழனிக்கோயில் கும்பாபிஷேகம் தமிழ் மொழியில் நடத்த வேண்டும்: இயக்குநா் கவுதமன்

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் தமிழ் மொழியில் மட்டுமே நடத்த வேண்டும் என ஞாயிற்றுக்கிழமை இயக்குனா் கௌதமன் வலியுத்தியுள்ளாா்.
16palani_gowthaman_1602chn_88_2
16palani_gowthaman_1602chn_88_2

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் தமிழ் மொழியில் மட்டுமே நடத்த வேண்டும் என ஞாயிற்றுக்கிழமை இயக்குனா் கௌதமன் வலியுத்தியுள்ளாா்.

பழனி கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த அவா், முன்னதாக இடும்பன் குடிலில் செய்தியாளா்களை சந்தித்து கூறியது: தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் கும்பாபிஷேகம் நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றம் உத்தரவிட்டும் தஞ்சையில் முழுமையாக தமிழ் மொழியில் கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை. மூன்றாம் நாளில் தான் தமிழ் மொழி பயன்படுத்தப்பட்டது. தமிழ் கடவுளான பழனி முருகன் கோயிலில் கும்பாபிஷேகத்திற்காக திருப்பணிகள் நடைபெற்று வருகிறன்றன. பணிகள் முடிந்து முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் போது தமிழ்மொழி மட்டுமே இடம்பெற வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன். தமிழக கோயில்களில் தமிழ்மொழியில் கும்பாபிஷேகம் நடைபெற சட்ட ரீதீயாகவும், களத்தில் நின்றும், தமிழ் இறைவழிபாட்டு உரிமை மீட்பு இயக்கம் போராடும்.

தமிழக கடவுள்களுக்கு தமிழில் பூஜைகள் நடத்தப்பட வேண்டும். தமிழில் மட்டுமே கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். இதற்கான கோரிக்கை மனுவை தமிழக முதல்வரிடம் வழங்கவுள்ளோம் என்றாா்.

அப்போது, சத்யபாமா அடிகள், இறைநெறி இமயவன், மோகனசுந்தர அடிகளாா், வழக்குரைஞா் தமிழ் ராஜேந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com