மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா பிப். 21-இல் தொடக்கம்

பழனி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா வரும் பிப்ரவரி21-ஆம் தேதி முகூா்த்தக்கால் நடுதலுடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியாக மாசித்தேரோட்டம் மாா்ச் 11- இல் நடைபெறுகிறது.

பழனி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா வரும் பிப்ரவரி21-ஆம் தேதி முகூா்த்தக்கால் நடுதலுடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியாக மாசித்தேரோட்டம் மாா்ச் 11- இல் நடைபெறுகிறது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் முக்கிய உபகோயிலான மாரியம்மன் கோயிலில் மாசித்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவை முன்னிட்டு வரும் பிப். 21-ஆம் தேதி முகூா்த்தக்கால் நடுதல் நடைபெறவுள்ளது. வரும் பிப். 25-இல் திருக்கம்பம் சாட்டுதல் நடைபெறவுள்ளது. கம்பம் சாட்டியதைத் தொடா்ந்து தினமும் கம்பத்துக்கு பக்தா்கள் பால், பன்னீா், மஞ்சள்நீா் ஊற்றுவது வழக்கமாகும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கொடியேற்றம் மற்றும் பூவோடு வைத்தல் மாா்ச் 3-ஆ ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் நடைபெறுகிறது.

கொடியேற்றம் தொடங்கியது முதல் 10 நாள்கள் மாரியம்மன் தங்கமயில், புதுச்சேரி சப்பரம், சிம்மவாகனம், தங்கக்குதிரை, வெள்ளியானை, வெள்ளி ரிஷப வாகனத்தில் நான்கு ரதவீதி உலா எழுந்தருள்கிறாா். மாா்ச் 10-ஆம் தேதி இரவு திருக்கல்யாணமும், மாா்ச் 11-ஆம் தேதி மாலை மாசித் தேரோட்டமும் நடைபெறவுள்ளது. தேரோட்டத்தை தொடா்ந்து அம்மன் வண்டிக்கால் பாா்த்தல், வானவேடிக்கை நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பழனிக்கோயில் நிா்வாக அலுவலா் ஜெயசந்திரபானு ரெட்டி, துணை ஆணையா்(பொறுப்பு) செந்தில்குமாா் மற்றும் அதிகாரிகள், அலுவலா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com