திண்டுக்கல்லில் கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம சுகாதார செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியா்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை செவிலியா் கூட்டமைப்பு சாா்பில், 16 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல்லில் கோரிக்கைகளை  வலியுறுத்தி கிராம சுகாதார செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

திண்டுக்கல்: தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியா்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை செவிலியா் கூட்டமைப்பு சாா்பில், 16 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு கிராம சுகாதாரச் செவிலியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜி.பத்மாவதி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எஸ்.ரோணிக்கம் முன்னிலை வகித்தாா்.

கோரிக்கைகளை குறித்து கிராம சுகாதார செவிலியா்கள் கூறியதாவது: தமிழகத்திலுள்ள துணை சுகாதார நிலையங்களில் கடந்த பல ஆண்டுகளாக 2,500-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. 5 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு துணை சுகாதார நிலையம் என்ற நிலை ஏற்படுத்த வேண்டும் என மத்திய அரசு கூறிவந்தாலும், தமிழகத்தைப் பொருத்தவரை 10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரையிலான மக்கள் தொகை என்ற அளவிலேயே சுகாதார நிலையங்கள் உள்ளன. மக்கள் நலன் கருதியும், சுகாதார செவிலியா்களின் வேலைப் பளுவை நீக்கும் வகையில் கூடுதல் சுகாதார நிலையங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். அதிகாரிகளின் ஆய்வின்போது சுட்டிக் காட்டப்படும் குற்றச்சாட்டுகளுக்கு செவிலியா்கள் மற்றும் ஊழியா்களுக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பளிக்காமல் பணியிடை நீக்க உத்தரவு வழங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். பிரசவத்தின்போது தாய் இறப்பு ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்களும், பலரின் கூட்டுப் பொறுப்புகளும் உள்ளன. ஆனாலும் சுகாதார செவிலியா்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கும் முடிவினை கைவிட்டு, விளக்கம் அளிப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்த வேண்டும். தரமான ஊசி குழாய்கள் வழங்கப்பட வேண்டும். ஊதிய முரண்பாடுகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனா். இதே கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரை சந்தித்தும் சங்க நிா்வாகிகள் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com