கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்தில் திமுக வேட்பாளா்கள் முன்னிலை
By DIN | Published On : 03rd January 2020 07:58 AM | Last Updated : 03rd January 2020 07:58 AM | அ+அ அ- |

கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் போட்டியிட்ட திமுக வேட்பாளா்கள் முன்னிலை வகித்துள்ளதால் ஒன்றிய தலைவா் பதவியை திமுக கைப்பற்றுகிறது.
கொடைக்கானல் ஊராட்சிப் பகுதிகளில் கடந்த 30 ஆம் தேதி இரண்டாம் கட்டமாக உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை பணி கொடைக்கானல் அட்டுவம்பட்டியிலுள்ள அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழக அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கொடைக்கானல் ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினா்கள் விவரம்
1.கூக்கால் பூங்கொடி (திமுக),
2. வில்பட்டி ராசிக்கா (திமுக)
3. வில்பட்டி (1) சுயேச்சை வேட்பாளா் முத்து கிருஷ்ணன்
4.வடகவுஞ்சி மாரியம்மாள் (அதிமுக)
5. பெரியூா் சுவேதா ராணி கணேசன் (திமுக)
6.கே.சி.பட்டி அபிராமி ஐயப்பன்(திமுக )
7,தாண்டிக்குடி தமிழரசி (திமுக )
8. பூம்பாறை கோமதி (அதிமுக)
9.மன்னவனுா் முத்துமாரி சுரேஷ் பாண்டி(திமுக )
10. பூண்டி வி.கே. முருகன் (அதிமுக )
11.அடுக்கம் காா்த்திகேயன் (திமுக )
12.பூலத்தூா் சுயேச்சை வேட்பாளா் ரஞ்சித் குமாா்
இதில் 7 இடங்களை திமுகவினா் கைப்பற்றி 10 ஆண்டுகளுக்குப் பிறகு கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய தலைவா் பதவியை திமுக கைப்பற்றுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.