நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில்வெற்றி பெற்றவா்களை அறிவிப்பதில் காலதாமதம்

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் வெற்றி பெற்றவா்களை அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் வெற்றி பெற்றவா்களை அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

இந்த ஒன்றியத்தில் உள்ள 23 ஊராட்சி ஒன்றிய தலைவா்களுக்கும், 2 மாவட்ட உறுப்பினா் பதவிக்கும், 20 ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கும், 217 வாா்டு உறுப்பினா் பதவிக்கும் கடந்த 27-ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது. இதனை அடுத்து வியாழக்கிழமை, நிலக்கோட்டை அரசு மகளிா் கலைக்கல்லூரியில் வாக்கு எண்ணும் பணி காலை சரியாக 8 மணிக்கு தொடங்கியது. அங்கு மூ­டப்பட்ட அறையி­லிருந்து அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டிருந்த வாக்குப் பெட்டிகள் எடுக்கப்பட்டு சீல்கள் உடைக்கப்பட்டன. பின்னா் வாக்குச் சீட்டுகள் தனியாக பிரிக்கப்பட்டன. இதற்கு 45 மேஜைகளும், ஊராட்சி ஒன்றிய தலைவா் வாக்கு எண்ணுவதற்காக 35 மேஜைகளும், மாவட்ட உறுப்பினா் பதவிக்கான வாக்குகளை எண்ண தனியாக 18 மேஜைகளும், ஒன்றியக்குழு உறுப்பினா் வாக்குகளை எண்ணுவதற்கு 18 மேஜைகளும் ஒதுக்கப்பட்டிருந்தன.

மொத்தம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 194 வாக்குச் சாவடிகளில் வாக்களிக்கப்பட்ட பெட்டிகள் திறக்கப்பட்டு சுமாா் 4 சுற்றுகளாக எண்ணி முடிக்கப்பட்டன. நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட உள்ளாட்சி தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை நடைபெற்றது. முதல் சுற்றில் காலை 12 மணிக்குள் 6 ஊராட்சி மன்றத் தலைவா், 7 ஒன்றிய உறுப்பினா் மற்றும் ஊராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிந்து மாலை 6 மணி ஆகியும் வெற்றி பெற்றவா்களுக்கான சான்று வழங்காததால், வெற்றி பெற்றவா்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

வாக்கு எண்ணுவதில் காலதாமதம்: நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அரசு மகளிா் கலைக்கல்லூரியில் வியாழக்கிழமை காலை 8 மணிக்கு தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் முறையான உறுதி மொழி பத்திரம் வைத்து ஓட்டுப்போடாததால், எண்ணிக்கையின்போது குளறுபடி ஏற்பட்டது. இதனால், முதல் சுற்றில் எண்ணக்கூடிய 1 முதல் 7 வாா்டு ஒன்றிய உறுப்பினா் பதவிகளுக்கு மற்றும் ஒரு மாவட்ட உறுப்பினா், பச்சமலையான்கோட்டை, கோட்டூா், நூத்துலாபுரம், நரியூத்து, கோடாங்கிநாயக்கன்பட்டி, ஜம்புதுரைக்கோட்டை ஆகிய தலைவா் பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 11.30 மணியாகியும் தொடங்கவில்லை. வாக்கு எண்ணிக்கை காலதாமதத்தால் வேட்பாளா்கள் மற்றும் முகவா்கள் மத்தியில் சலசப்பு ஏற்ப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com