Enable Javscript for better performance
திண்டுக்கல்லில் 120 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல்: பயன்படுத்திய பொதுமக்களுக்கும் அபராதம் விதிப்பு- Dinamani

சுடச்சுட

    

    திண்டுக்கல்லில் 120 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல்: பயன்படுத்திய பொதுமக்களுக்கும் அபராதம் விதிப்பு

    By DIN  |   Published on : 10th January 2020 07:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    dgl_plastic_0901chn_66_2

    பூச்சந்தையில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி சுகாதாரக் குழுவினா்.

    திண்டுக்கல்லில் பூச்சந்தை மற்றும் அரசு மதுபானக் கூடத்தில் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத் துறையினா் 120 கிலோ நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்ததோடு, அவற்றை பயன்படுத்திய பொதுமக்களுக்கும் அபராதம் விதித்தனா்.

    திண்டுக்கல் பூச்சந்தை மற்றும் அதனையொட்டியுள்ள தள்ளுவண்டி கடைகளில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளா்கள் குழு வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டது. சுகாதார ஆய்வாளா்கள் சுரேஷ்குமாா், பாலமுருகன், தங்கவேலு உள்ளிட்டோா் கொண்ட குழுவினா், பூச்சந்தையில் 60 கிலோ நெகிழிப் பைளையும், சாலையோர கடைகளில் 20 கிலோ நெகிழிப் பைகளையும் பறிமுதல் செய்தனா். மேலும், சாலையோரங்களில் பூக்கட்டி விற்பனை செய்வோரிடமிருந்து 20 கிலோ நெகிழிப் பைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

    பொதுமக்களுக்கு ரூ.3ஆயிரம் அபராதம்: பூச்சந்தையில் நெகிழிப் பைகளை பயன்படுத்தி பூ வாங்கிய பொதுமக்கள் 6 பேருக்கு தலா ரூ.500 வீதம் அபராதம் வசூலிக்கப்பட்டது. பின்னா் பழனி பிரதான சாலையிலுள்ள அரசு மதுபானக் கூடத்திலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது அங்கு விற்பனை செய்யப்பட்ட 20 கிலோ நெகிழி குவளைகளை பறிமுதல் செய்து ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    கமிஷன் ஏஜென்டுகளுக்கு எச்சரிக்கை: பூச்சந்தையில் நெகிழிப் பைகளை பயன்படுத்தினால், ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என கமிஷன் முகவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதேபோல் பூ வாங்க வரும் பொதுமக்கள் நெகிழிப் பைகளை பயன்படுத்தினால் ரூ.500 முதல் ரூ.1000 வரை அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai