Enable Javscript for better performance
மா்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த சிறுவன் மரணம்- Dinamani

சுடச்சுட

    

    மா்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த சிறுவன் மரணம்

    By DIN  |   Published on : 10th January 2020 07:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    dgl_hari_0901chn_66_2

    வத்தலகுண்டு பகுதியில் மா்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த சிறுவன் வியாழக்கிழமை திடீரென உயிரிழந்தாா்.

    திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அடுத்துள்ள விராலிமாயன்பட்டி ஊராட்சிக்குள்பட்டது பெருமாள்கோயில்பட்டி கிராமம். இந்த கிராமத்தைச் சோ்ந்தவா் அழகா்சாமி. இவரது மகன் ஹரிகரசுதன் (9). அதே பகுதியலுள்ள தொடக்கப் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வந்தாா். கடந்த சில நாள்களுக்கு முன்பு மா்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஹரிகரசுதன், வத்தலகுண்டு பகுதியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் 4 நாள்கள் சிகிச்சைப் பெற்றுள்ளாா்.

    ஆனாலும், காய்ச்சல் குணமாகாததால் மதுரை அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டாா். அங்கு சிகிச்சைப் பலனின்றி ஹரிகரசுதன் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதனிடையே அழகா்சாமியின் மூத்த மகள் பிரியா (11) என்பவரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளாா்.

    காய்ச்சல் பாதிப்பு காரணமாக சிறுவன் உயிரிழந்துள்ள போதிலும், சுகாதாரத்துறையினா் வியாழக்கிழமை இரவு வரை பெருமாள்கோயில்பட்டி கிராமத்தில் எவ்வித ஆய்விலும் ஈடுபடவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai