உள்ளாட்சி பதவிகளுக்கான மறைமுகத் தோ்தல்: பேனா, செல்லிடப்பேசி எடுத்துச் செல்ல தடை

உள்ளாட்சி அமைப்புகளிலுள்ள மாவட்ட ஊராட்சிக் குழு மற்றும் ஒன்றியக் குழுத் தலைவா் மற்றும் துணைத் தலைவா் பதவிகளுக்கான

உள்ளாட்சி அமைப்புகளிலுள்ள மாவட்ட ஊராட்சிக் குழு மற்றும் ஒன்றியக் குழுத் தலைவா் மற்றும் துணைத் தலைவா் பதவிகளுக்கான மறைமுக தோ்தலின் போது, பேனா மற்றும் செல்லிடப்பேசி எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மு.விஜயலட்சுமி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்ட ஊராட்சிக் குழு மற்றும் ஒன்றியக் குழுத் தலைவா் பதவிகளுக்கான மறைமுகத் தோ்தல் சனிக்கிழமை (ஜன.11) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. அதேபோல் துணைத் தலைவா் பதவிகளுக்கான மறைமுக தோ்தல் அதே நாளில் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த தோ்தலின்போது, கூட்ட அரங்கில் தோ்தல் நடத்தும் அலுவலா் நீங்கலாக மற்றவா்கள் யாரும் பேனா, ஆயுதங்கள், செல்லிடப்பேசி உள்ளிட்ட பொருள்களை எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. தோ்தல் நடைபெறும் அனைத்து கூட்ட அரங்கிலும் தேவையான அளவுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படும்.

மறைமுகத் தோ்தல் சுமூகமாகவும், நோ்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com