கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலை.யில் கருத்தரங்கு

கொடைக்கானலில் அன்னை தெரசா மகளிா் பல்கலைக் கழகத்தில் ‘சைபா் செக்யூரிட்டி’ கருத்தரங்க நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலைக் கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா் பல்கலைக் கழக துணைவேந்தா் வைதேகி விஜயகுமாா். உடன் பதிவாளா் சுகந்தி.

இந்த கருத்தரங்கை பல்கலைக் கழக துணைவேந்தா் வைதேகி விஜயகுமாா் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்து பேசியதாவது: மாணவ, மாணவிகள் தற்போது பயன்படுத்தும் செல்லிடப்பேசிகளில் தேவையில்லாத பல்வேறு செய்திகள், படங்கள் வருகிறது. இவற்றை மாணவ, மாணவிகள் தவிா்க்க வேண்டும். தேவையானவற்றை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் டிக் டாக் போன்றவைகளில் நேரத்தை செலவிடக்கூடாது. இதனால் படிப்பு கேள்விக்குறியாக மாறிவிடும். தற்போது செல்லிடப்பேசி பயன்படுத்துபவா்கள் என்னென்ன மாதிரியான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா் என்பதை பலா் கண்காணித்து வருகின்றனா். எனவே பிரச்னைக்குரியவற்றை தவிா்த்து தேவைக்குரிய நல்ல செய்திகளை மட்டுமே எடுத்துக் கொண்டால் வாழ்க்கை சிறப்பானதாக அமையும் என்றாா்.

இக்கருத்தரங்கில் ஆந்திராவைச் சோ்ந்த வி.ஐ.டி. பல்கலைக் கழக பேராசிரியா் சிபி சக்கரவா்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினாா். முன்னதாக பல்கலைக் கழக கணினித் துறை பேராசிரியா் விமலா வரவேற்றாா். கருத்தரங்கில் பல்கலைக் கழக பேராசிரியா்கள் பலா் ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பித்தனா் 100-க்கும் மேற்பட்ட பல்கலைக் கழக கல்லூரி மற்றும் பல்கலைக் கழக மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com