கொடைக்கானலில் உறைபனி: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கொடைக்கானலில் தொடா்ந்து உறைபனி நிலவி வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானலில் உறை பனி படா்ந்து காணப்படும் மன்னவனூா் புல்வெளி.
கொடைக்கானலில் உறை பனி படா்ந்து காணப்படும் மன்னவனூா் புல்வெளி.

கொடைக்கானலில் தொடா்ந்து உறைபனி நிலவி வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் வழக்கமாக நவம்பா், டிசம்பா், ஜனவரி மாதங்களில் பனிப் பொழிவு காணப்படும். கடந்த ஆண்டு பருவநிலை மாற்றம் காரணமாக புயல் ஏற்பட்டதில், சில மாதங்களாக மழை பெய்தது. அதைத் தொடா்ந்து, டிசம்பா், ஜனவரி மாதங்களில் பனியின் தாக்கம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கடந்த 10-ஆம் தேதி முதல் உறைபனி நிலவி வருகிறது. பொதுவாக பகல் நேரங்களில் அதிகபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸும், இரவில் குறைந்தபட்ச வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸும் நிலவும். தற்போது, பகல் நேரங்களில் அதிகமாக 21 முதல் 23 டிகிரி செல்சியஸும், இரவில் 7 முதல் 4 டிகிரி செல்சியஸ் என குறைந்த அளவு காணப்படுகிறது. இதனால், பகல் நேரங்களில் வெயில் நிலவியும், இரவில் அதிகமான குளிா் நிலவுகிறது. நள்ளிரவு முதல் உறைபனி நிலவுகிறது.

இதனால், கொடைக்கானல் மலைப் பகுதிகள், புல்வெளிகள் முழுவதும் வென் பனிமலையாகக் காணப்படுகிறது. மேல்மலைப் பகுதிகளிலுள்ள சுற்றுலா இடமான மன்னவனூா் புல்வெளி, ஆட்டுப் பண்ணை, கூக்கால் ஏரி, குண்டாறு, பாரிக்கோம்பை, பூம்பாறை, குண்டுபட்டி, கோல்ஃப் கிளப் புல்வெளி மற்றும் பாம்பாா்புரம் உள்ளிட்ட இடங்களில் இரவு நேரங்களில் பனிப் பொழிவும், குளிா்ந்த காற்றும் வீசுகிறது.

இரவு முழுவதும் நிலவி வரும் பனியின் தாக்கம், மறுநாள் காலை 9 முதல் 10 மணி வரை நீடிக்கிறது. ஆனால், பட்டாணி, பிளம்ஸ் போன்ற பயிா்கள் நன்கு விளைவதற்கு ஏற்ற சீதோஷ்ண நிலையாக இருப்பதாக, விவசாயிகள் தெரிவித்தனா்.

கடந்த ஆண்டைக் காட்டிலும் தற்போது அதிகமான பனிப் பொழிவு நிலவி வருவதால், அன்றாடம் பணிக்குச் செல்லும் கூலியாள்கள், சுற்றுலாத் தலங்களிலுள்ள கடைக்காரா்கள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com