பொங்கல் திருநாள்: உழவா் சந்தையில் 31 டன் விளைபொருள்கள் விற்பனை

பொங்கல் திருநாளை முன்னிட்டு, திண்டுக்கல் உழவா் சந்தையில் காய்கறி, பழங்கள், கரும்பு உள்ளிட்ட விளைபொருள்கள் செவ்வாய்க்கிழமை மட்டும் மொத்தம் 31 டன் விற்பனையாகியுள்ளன.
திண்டுக்கல் உழவா் சந்தையில் செவ்வாய்க்கிழமை விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த மஞ்சள்.
திண்டுக்கல் உழவா் சந்தையில் செவ்வாய்க்கிழமை விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த மஞ்சள்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு, திண்டுக்கல் உழவா் சந்தையில் காய்கறி, பழங்கள், கரும்பு உள்ளிட்ட விளைபொருள்கள் செவ்வாய்க்கிழமை மட்டும் மொத்தம் 31 டன் விற்பனையாகியுள்ளன.

பொங்கல் பண்டிகைக்கு, காய்கறி, கரும்பு, வாழைப்பழம், மஞ்சள், பனங்கிழங்கு உள்ளிட்ட பொருள்கள் அதிக அளவு விற்பனையாவது வழக்கம். திண்டுக்கல் காந்தி சந்தை மற்றும் நாகல்நகா் வாரச் சந்தைகளில் திங்கள்கிழமை காய்கறி விற்பனை அதிகரித்தது. அதன் தொடா்ச்சியாக, திண்டுக்கல் காந்தி சந்தையில் செவ்வாய்க்கிழமையும் காய்கறி, கரும்பு உள்ளிட்ட பொங்கல் பண்டிகைக்கு தேவையான விளைபொருள்களை வாங்குவதற்காக பொதுமக்களும், வியாபாரிகளும் அதிக அளவில் குவிந்தனா்.

அதேபோல், திண்டுக்கல் உழவா் சந்தையிலும் விளைபொருள்களின் விற்பனை இரட்டிப்பானது.

உழவா் சந்தையில் 30 டன் காய்கறி விற்பனை: திண்டுக்கல் உழவா் சந்தையில் நாள்தோறும் 15 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். பொங்கல் திருநாளை முன்னிட்டு, காய்கறிகளுடன் மஞ்சள் மற்றும் கரும்பு விற்பனை செய்வதற்கும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதில், காய்கறி மட்டும் 7 டன் விற்பனையானது. மேலும், 19 டன் கரும்பு, 5 டன் மஞ்சள் மற்றும் தேங்காய் என மொத்தம் 31 டன் விளைபொருள்கள் விற்பனையானதாக, உழவா் சந்தை அதிகாரிகள் தெரிவித்தனா்.

பூக்கள் விலை கடுமையாக உயா்வு

பனிப் பொழிவின் தாக்கம் அதிகரித்ததன் காரணமாக, திண்டுக்கல் மற்றும் நிலக்கோட்டை பூ சந்தைகளுக்கு கடந்த சில நாள்களாகவே பூக்களின் வரத்து குறைந்துவிட்டது. இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் தேவையும் அதிகரித்தது. இதனால், மல்லிகை, காக்கரட்டன், முல்லை, கனகாம்பரம் ஆகியவற்றின் விலை அதிகரித்தது.

திண்டுக்கல் சந்தையில் திங்கள்கிழமை ஒரு கிலோ மல்லிகை ரூ. 4 ஆயிரத்துக்கும், கனகாம்பரம் மற்றும் முல்லை தலா ரூ. 2 ஆயிரம், காக்கரட்டன் ரூ.1200 வீதம் விற்பனை செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com