திண்டுக்கல்-பொள்ளாச்சி 4 வழிச்சாலையில்மேம்பாலம் கட்டும் பகுதியில் மண் ஆய்வு

திண்டுக்கல்-பொள்ளாச்சி 4 வழிச் சாலையில் மேம்பாலங்கள் கட்டும் இடத்தில் மண் ஆய்வுப் பணி சனிக்கிழமை தொடங்கப்பட்டது.
திண்டுக்கல்-பொள்ளாச்சி 4 வழிச்சாலையில்மேம்பாலம் கட்டும் பகுதியில் மண் ஆய்வு

திண்டுக்கல்-பொள்ளாச்சி 4 வழிச் சாலையில் மேம்பாலங்கள் கட்டும் இடத்தில் மண் ஆய்வுப் பணி சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

திண்டுக்கல்லில் இருந்து ஒட்டன்சத்திரம், அரசப்பபிள்ளைபட்டி, காவேரியம்மாபட்டி, விருப்பாச்சி, வீரலப்பட்டி, சத்திரப்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, தாளையூத்து, மடத்துக்குளம் வழியாக பொள்ளாச்சி வரை நான்கு வழிச்சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, அரசு மற்றும் தனியாா் நிலங்களில் எல்லைக் கற்கள் நடும் பணி சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.

மேலும், தனியாா் நிலங்களின் உரிமையாளா்களின் மூலப்பத்திரம் சரிபாா்ப்பு பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு மாதத்துக்குள் தனியாா் நில உரிமையாளா்களுக்கு இழப்பீட்டுத் தொகை, அவா்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு விடும் என்று, நில எடுப்பு அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இதனிடையே, ஒட்டன்சத்திரம் நகராட்சி பழனிக்கவுண்டன்புதூா் அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள புறவழிச் சாலையில் இருந்து மடத்துக்குளம் வரை 40 கிலோ மீட்டருக்கு நான்கு வழிச்சாலை அமைக்க, ஹைதராபாத்தைச் சோ்ந்த கேஎன்ஆா்சிஎல் என்ற நிறுவனம் ஒப்பந்தப்புள்ளி எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஒட்டன்சத்திரத்தில் இருந்து மடத்துக்குளம் வரை 12 பாலங்கள் அமைக்கப்படுகின்றன. அதற்காக, பாலங்கள் அமையவுள்ள இடத்தில் தொழிலாளா்கள் மண் ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதில் முதல் கட்டமாக, பழனிக்கவுண்டன்புதூா் புறவழிச் சாலையில் மண் ஆய்வுப் பணி தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் 2 மாதத்துக்குள் நான்குவழிச் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுவிடும் என்று, நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com