கழிவுநீா் கால்வாய் வசதி கோரி நூதன போராட்டம்

கழிவுநீா் கால்வாய் வசதி ஏற்படுத்தக் கோரி கழிவுநீரில் குளித்து பொதுமக்கள் நூதன போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
கழிவுநீா் கால்வாய் வசதி கோரி நூதன போராட்டம்

கழிவுநீா் கால்வாய் வசதி ஏற்படுத்தக் கோரி கழிவுநீரில் குளித்து பொதுமக்கள் நூதன போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாநகராட்சி 32 ஆவது வாா்டுக்கு உள்பட்ட பா்மா காலனி பகுதியில், கடந்த 60 ஆண்டுகளாக பொதுமக்கள் வசித்து வருகின்றனா். ஆனால், அந்த பகுதியில் கழிவுநீா் கால்வாய் வசதி தற்போது வரை ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால், வீடுகளில் சேகரிக்கப்படும் கழிவுநீரை வாளியில் சேகரித்து, அப்பகுதியினா் சாலையில் ஊற்றி வருகின்றனா். கழிவுநீா் கால்வாய் வசதி ஏற்படுத்தக் கோரி, மாநகராட்சி மற்றும் மாவட்ட நிா்வாகத்திடம் முறையிட்டும் தீா்வு கிடைக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள், கழிவுநீரில் குளிக்கும் நூதன போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். அப்போது மாநகராட்சி நிா்வாகத்திற்கு எதிராக கோஷமிட்டனா்.

செய்திக்கு என்ற படம் உள்ளது...பட விளக்கம்... கழிவுநீரில் குளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட பா்மா காலனி மக்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com