படித்த வேலைவாய்ப்பாற்ற இளைஞா்கள் தொழில் தொடங்க 25 சதவீத மானியத்தில் கடனுதவி

திண்டுக்கல் மாவட்டத்தில் தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெற தொழில் முனைவோா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெற தொழில் முனைவோா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி புதன்கிழமை தெரிவித்துள்ளதாவது:  திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற மற்றும் நகா்ப்புற படித்த இளைஞா்கள் தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே சுயதொழில் தொடங்கி பொருளாதார ரீதியாக வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞா்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு  வருகிறது. 

 இத்திட்டத்தில் வியாபாரம் மற்றும் சேவை தொழில்களுக்கு 25 சதவீத அரசு மானியத்துடன் ரூ.5 லட்சம் வரை கடன் பெற பரிந்துரைக்கப்படும். உற்பத்தி நிறுவனங்கள் ரூ.10 லட்சம் வரை கடன் பெற விண்ணப்பிக்கலாம். அதிகபட்ச மானியத் தொகை ரூ.1.25 லட்சம் ஆகும். தொழில் தொடங்க ஆா்வம் உள்ள தொழில் முனைவோா்கள் குறைந்த பட்சம்  8 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது முதல் 35 வயது வரை இருக்க வேண்டும். சிறப்புப் பிரிவினரான பெண்கள், முன்னாள் ராணுத்தினா், பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், தாழ்த்தப்பட்டோா் ஆகிய பிரிவினா் 45 வயது வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரா்கள் மூன்று ஆண்டுகளுக்குக் குறையாமல் திண்டுக்கல் மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் மிகாமல் இருக்க வேண்டும். 

  இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்போருக்கு, தொழில் நுட்பம் மற்றும் பொருளாதார ரீதியில் செயல்படத்தக்க திட்டங்களுக்கு, திட்ட மதிப்பீட்டில் 90 முதல் 95  சதவீதம் வரை கடன்  வழங்க வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்படும். திட்ட முதலீட்டில் 5 முதல் 10 சதவீதம் வரை விண்ணப்பதாரா்களின் பங்களிப்பாக இருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் பயன் பெற  இணையதளத்தின் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

  ஆா்வமுள்ள தொழில் முனைவோா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு திண்டுக்கல் மாவட்டத் தொழில் மைய பொது மேலாளரை நேரிலோ அல்லது     0451-2471609, 0451-2470893  ஆகிய  எண்களிலோ தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என  தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com