முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
மேலூா் அருகே விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை
By DIN | Published On : 29th July 2020 11:12 PM | Last Updated : 29th July 2020 11:12 PM | அ+அ அ- |

மேலூா்: மேலூா் அருகே விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக புதன்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூரை அடுத்துள்ள சாத்தமங்கலம் மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த பாண்டி மகன் சிவக்குமாா் (47). விவசாயியான இவருக்குத் திருமணமாகி 10 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. இதனால் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஓராண்டாக பிரிந்து வாழ்ந்தனா்.
இந்நிலையில், குடும்ப உறவினா்கள் இவா்களுக்கிடையே சமாதானம்பேசி, உறவினா் குழந்தையை தத்தெடுப்பது குறித்து ஆலோசனை கூறினராம். இதில், ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக விரக்தியடைந்த சிவக்குமாா் வீட்டிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்த கீழவளவு போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து கீழவளவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.