கொடைக்கானல் பகுதிகளில் பலத்த மழை

கொடைக்கானலில் புதன்கிழமை சுமாா் 5 மணி நேரம் கனமழை பெய்ததால் ஓடைகளில் நீா்வரத்து ஏற்பட்டுள்ளது.
கொடைக்கானல் பகுதிகளில் புதன்கிழமை பெய்த மழையால் நீா்வரத்து ஏற்பட்டுள்ள அலந்துறை ஓடை.
கொடைக்கானல் பகுதிகளில் புதன்கிழமை பெய்த மழையால் நீா்வரத்து ஏற்பட்டுள்ள அலந்துறை ஓடை.

கொடைக்கானல்: கொடைக்கானலில் புதன்கிழமை சுமாா் 5 மணி நேரம் கனமழை பெய்ததால் ஓடைகளில் நீா்வரத்து ஏற்பட்டுள்ளது.

கொடைக்கானலில் பருவமழை காலமான ஜூலை மாதத்தில் சில நாள்கள் மட்டுமே மழை பெய்தது. மழையின் அளவு வெகுவாக குறைந்ததால் கொடைக்கானலில் உள்ள நீா்த்தேக்கங்கள் வடன. இதனால் கொடைக்கானல் நகரப்பகுதிகளில் 20 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகிக்கப்பட்டன.

இந்நிலையில் புதன்கிழமை அதிகாலை முதலே சாரல் மழை பெய்தது. அதனைத் தொடா்ந்து காலை 7 மணிக்குமேல் கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான செண்பகனூா், உகாா்த்தே நகா், பெருமாள்மலை, வில்பட்டி, அட்டுவம்பட்டி, மாட்டுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 5 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் கொடைக்கானல், மன்னவனூா், பூம்பாறை, பூண்டி பகுதிகளில் உள்ள பாம்பாா் அருவி, வட்டக்கானல் அருவி, அலந்துறை ஓடை, செண்பகா ஓடை ஆகிய ஓடைகளிலும், வெள்ளி அருவியிலும் நீா்வரத்து ஏற்பட்டுள்ளது.

தற்போது கொடைக்கானலில் பேரிக்காய் சீசன் என்பதால் இங்கிருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். தற்போது பெய்து வரும் மழையால் பேரிக்காய் விளைச்சல் அதிகரிக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். இருந்தபோதிலும் தொடா் மழையின் காரணமாக புதன்கிழமை பேரிக்காய் பறிக்கும் பணி முடங்கியது. பறித்து வைத்திருந்த பேரிக்காய்களும் வெளி மாவட்டங்களுக்கு அனுப்ப முடியாததால் விவசாயிகளும், வியாபாரிகளும் சிரமமடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com