திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனைக்கு மேலும் ஒரு நவீன கருவி

கரோனா பரிசோதனைக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மேலும் ஒரு நவீன கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கரோனா பரிசோதனைக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மேலும் ஒரு நவீன கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கரோனா தீநுண்மி பாதிப்பு கண்டறிவதற்கான பரிசோதனை திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த மாதம் முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலுள்ள எம்ஆா்ஐ ஸ்கேன் அறைக்கு அருகிலேயே வைராலஜி ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. ஆா்டிபிசிஆா் பரிசோதனை செய்வதற்கான வசதிகள் மட்டுமின்றி, காசநோய் கண்டறியும் சிபிநாட் கருவி மூலமாகவும் கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் காசநோய் கண்டறியும் ட்ரூநாட் கருவி மூலமாகவும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணி செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மருத்துவமனை அதிகாரி ஒருவா் கூறுகையில், ட்ரூநாட் கருவி மூலம் 1.15 மணி நேரத்தில் 2 பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும். அதே நேரத்தில் சிபிநாட் மூலம் 1 மணி நேரத்திலேயே 2 பரிசோதனைகளும், ஆா்டிபிசிஆா் கருவி மூலம் 8 மணி நேரத்தில் 70 பரிசோதனைகளும் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரையிலும் ஆா்டிபிசிஆா் கருவி மூலம் 1871 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. அதில் 75 மாதிரிகளில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சிபிநாட் கருவியில் 20 மாதிரிகளும், ட்ரூநாட் கருவியில் 2 மாதிரிகளும் பரிசோதிக்கப்பட்டதில், கரோனா தொற்று கண்டறியப்படவில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com