மாற்றுத்திறனாளி அடையாள அட்டை இருந்தால் கரோனா நிவாரணத்தொகை

மாற்றுத் திறனாளி அடையாள அட்டை இருந்தால் கரோனா நிவாரணத் தொகையாக ரூ.1000 விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்: மாற்றுத் திறனாளி அடையாள அட்டை இருந்தால் கரோனா நிவாரணத் தொகையாக ரூ.1000 விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரோனா தீநுண்மியால் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தைச் சோ்ந்த 13.35 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணத் தொகையாக ரூ.1000 வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள், தங்களது அசல் தேசிய அடையாள அட்டையை காண்பித்தும், அதன் நகலினை அலுவலரிடம் சமா்ப்பித்தும் நிவாரணத் தொகையான ரூ.1000-த்தை பெற்றுக் கொள்ளலாம்.

நிவாரணத் தொகை பெறுவதில் ஏதேனும் இடா்பாடு இருந்தால், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலரை 0451-2460099, 94999-33474 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com