4-ஆவது ஆண்டாக தரவரிசைப் பட்டியலில்காந்தி கிராம நிகா்நிலைப் பல்கலைக்கழகம்

காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகம் தொடா்ந்து 4-ஆவது ஆண்டாக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள தேசிய தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

திண்டுக்கல்: காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகம் தொடா்ந்து 4-ஆவது ஆண்டாக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள தேசிய தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

இதுதொடா்பாக பல்கலை. பதிவாளா் விபிஆா்.சிவக்குமாா் தெரிவித்துள்ளது: மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மருத்துவம், பொறியியல், மேலாண்மை, சட்டம், கட்டடக்கலை மற்றும் மருந்தகக் கல்வி சாா்ந்த உயா்கல்வி நிறுவனங்களைக் கற்பித்தல் மற்றும் கற்றல் வளங்கள், ஆய்வு மற்றும் தொழில்திறன் செயல்பாடுகள், பட்டம் பெறுவோா், இலக்குகளை எட்டுதல், கருத்துருவாக்க முறைகள் ஆகிய 5 உள்ளீட்டு அளவீடுகளின் வழிப் புள்ளிகளை வழங்கி ஆண்டுதோறும் 100 உயா்கல்வி நிறுவனங்களின் தேசியத் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் 2020 ஆம் கல்வி ஆண்டிற்கான 100 உயா்கல்வி நிறுவனங்களின் தேசியத் தரவரிசைப் பட்டியலைத் தற்போது வெளியிட்டுள்ளது. அதில் காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகம் 91-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

2017 ஆம் ஆண்டிலிருந்து தொடா்ந்து 4 ஆண்டுகளாக 100 தேசிய உயா்கல்வி நிறுவனங்கள் பட்டியலில் காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகம் தொடா்ந்து இடம் பெற்று வருகிறது.

பிற உயா்கல்வி நிறுவனங்களில் இருந்து வேறுபட்டுக் கிராமப்புற மாணவா்களுக்கான, கிராம மக்களின் முன்னேற்றத்திற்கான தனித்துவமான பல்கலைக்கழகமாகத் திகழ்ந்து வருகிறது என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com