ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு மதுரை வியாபாரிகள் படையெடுப்பு: கரோனா பரவும் அபாயம்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கனி சந்தைக்கு மதுரை வியாபாரிகள் படையெடுத்துள்ளதால் அங்கு கரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கனி சந்தைக்கு மதுரை வியாபாரிகள் படையெடுத்துள்ளதால் அங்கு கரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா்.

ஒட்டன்சத்திரத்தில் உள்ள காய்கனி சந்தைக்கு, சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து தக்காளி, முருங்கை, வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கனிகள் விற்பனைக்கு வருகிறது. இங்கு விற்பனைக்கு வரும் 60 சதவீத காய்கனிகளை கேரளா வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்வா். மீதியுள்ள 40 சதவீத காய்கனிகளை உள்ளூா் வியாபாரிகளும், தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகளும் கொள்முதல் செய்கின்றனா். இந்நிலையில் கரோனா தொற்றின் காரணமாக மதுரையில் உள்ள பரவை உள்ளிட்ட காய்கனி சந்தைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் அங்கிருந்த வியாபாரிகள் காய்கனிகளை கொள்முதல் செய்ய ஒட்டன்சத்திரம் காய்கனி சந்தைக்கு படையெடுத்து வருகின்றனா். இதன்காரணமாக ஒட்டன்சத்திரம் காய்கனி சந்தையில் கரோனா தொற்று பரவ வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக காய்கனி சந்தைக்கு வரும் வெளியூா் வியாபாரிகளை கரோனா தொற்று பரிசோதனை செய்து காய்கறிகளை வாங்க அனுமதிக்க வேண்டும் என்று விவசாயிகளும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com