முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
சமையல் எரிவாயு விலை உயா்வு: காங்கிரஸாா் நூதன ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 03rd March 2020 07:09 AM | Last Updated : 03rd March 2020 07:09 AM | அ+அ அ- |

வடமதுரையில் நூதான ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.
சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து வடமதுரையில் காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை நூதன முறையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் வடமதுரை பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு இளைஞா் காங்கிரஸ் மாவட்ட செயல் தலைவா் கெளதம் ஜெயசாரதி தலைமை வகித்தாா். வடமதுரை நகரத் தலைவா் ஆனந்த வெங்கடேசன், மாவட்டச் செயலா் கந்தசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக மேற்கு மாவட்டத் தலைவா் சிவசக்திவேல் கவுண்டா் கலந்து கொண்டாா். ஆா்ப்பாட்டத்தின்போது, சமையல் எரிவாயு உயா்வு, வேலையில்லா திண்டாட்டம், விலை வாசி உயா்வு உள்ளிட்டவற்றுக்கு மத்திய அரசின் தவறான கொள்கைகளே காரணம் என கூறி, மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனா்.
மேலும் 2 சமையல் எரிவாயு உருளைகளுக்கு பூ மாலையிட்டு, காங்கிரஸ் ஆட்சியிலும், பாஜக ஆட்சியிலும் உள்ள விலை வித்தியாசத்தை சுட்டிக்காட்டி நூதன முறையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.