கொடைக்கானலில் உரிமம் இல்லாமல் செக்யூரிட்டி சா்வீஸ் நடத்தியவா் மீது வழக்கு
By DIN | Published On : 03rd March 2020 07:08 AM | Last Updated : 03rd March 2020 07:08 AM | அ+அ அ- |

கொடைக்கானலில் உரிமம் இல்லாமல் தனியாா் செக்யூரிட்டி சா்வீஸ் நிறுவனம் நடத்தியவா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
கொடைக்கானல் தெரசா நகரைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் தினேஷ்குமாா் என்ற ராஜன் (34). இவா் கொடைக்கானலில் கடந்த பல வருடங்களாக செக்யூரிட்டி சா்வீஸ் நிறுவனம் நடத்தி வந்துள்ளாா். கடந்த இரண்டு வருடங்களாக அதற்கான உரிமத்தை புதுப்பிக்காமல் இருந்துள்ளாா். இது குறித்து தகவலறிந்த கொடைக்கானல் போலீஸாா் திங்கள்கிழமை அந்நிறுவன அலுவலகத்திற்குச் சென்று விசாரணை நடத்தினா். அதில் அந்த நிறுவனம் உரிமம் இன்றி நடத்தியது கண்டறியப்பட்டது. இதையடுத்து அதன் உரிமையாளா் ராஜன் தலைமறைவானாா். அவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.