ஒட்டன்சத்திரம் அருகே சமுதாயக் கூட கட்டடத்துக்கான பூமி பூஜை
By DIN | Published On : 06th March 2020 07:06 AM | Last Updated : 06th March 2020 07:06 AM | அ+அ அ- |

காளாஞ்சிபட்டி ஊராட்சியில் சமுதாயக்கூடம் கட்டுதவதற்காக வியாழக்கிழமை நடைபெற்ற பூமிபூஜையில் கலந்துகொண்டோா்.
ஒட்டன்சத்திரம் அருகே ரூ.25 லட்சம் செலவில் சமுதாயக்கூடம் கட்டுவதற்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத் தொகுதி காளாஞ்சிபட்டி ஊராட்சியில், மாநிலங்களவை உறுப்பினா் வைகோ தொகுதி மேம்பாட்டு வளா்ச்சி நிதியில் இருந்து ரூ. 25 லட்சம் செலவில் சமுதாயக்கூடம் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு, ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவை உறுப்பினா் அர. சக்கரபாணி தலைமை வகித்தாா். மதிமுக மாவட்டச் செயலா் செல்வராகவன், திமுக ஒன்றியச் செயலா்கள் தா்மராஜன், சோதீசுவரன், நகரச் செயலா் ப. வெள்ளைச்சாமி மற்றும் மாவட்டக் கவுன்சிலா் சங்கீதா பழனிச்சாமி, ஒன்றியக் கவுன்சிலா் கண்மணி கருணாதேவி, காளாஞ்சிபட்டி ஊராட்சிமன்றத் தலைவா் க. அமுதா, துணைத் தலைவா் கெளரி மற்றும் கட்சிப் பிரமுகா்கள், ஊா் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.