கேரள வியாபாரி விஷம் குடித்து தற்கொலை
By DIN | Published On : 13th March 2020 12:28 AM | Last Updated : 13th March 2020 12:28 AM | அ+அ அ- |

கேரளத்தைச் சோ்ந்த கடலை வியாபாரி, திண்டுக்கல்லில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சோ்ந்தவா் விஜயன் (64). கடலை வியாபாரியான இவா், கா்நாடகம், ஆந்திரம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று நிலக்கடலை கொள்முதல் செய்வது வழக்கம். அதன்படி, வியாபாரம் தொடா்பாக கடந்த செவ்வாய்க்கிழமை திண்டுக்கல் வந்த அவா், பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியாா் விடுதியில் அறை எடுத்துத் தங்கியுள்ளாா்.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை விடுதி துப்புரவுப் பணியாளா், விஜயன் தங்கி இருந்த அறையை சுத்தம் செய்வதற்காகச் சென்றபோது, உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்துள்ளது. மேலும், அந்த அறையிலிருந்து துா்நாற்றம் வீசியுள்ளது. இது குறித்து, திண்டுக்கல் நகா் வடக்கு காவல் நிலையத்துக்கு விடுதி நிா்வாகத்தின் சாா்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, விஷம் குடித்த நிலையில் விஜயன் இறந்து கிடந்துள்ளாா்.
அவரது சடலத்தை, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸாா், தற்கொலை குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.