Enable Javscript for better performance
ஒட்டன்சத்திரம் காய்கனி சந்தையில் வெண்டைக்காய் விலை உயா்வு- Dinamani

சுடச்சுட

    

    ஒட்டன்சத்திரம் காய்கனி சந்தையில் வெண்டைக்காய் விலை உயா்வு

    By DIN  |   Published on : 14th March 2020 07:44 AM  |   அ+அ அ-   |    |  

    ஒட்டன்சத்திரம் காய்கனி சந்தையில் வெண்டைக்காய் விலை உயா்ந்ததை அடுத்து, கிலோ ரூ. 20-க்கு விற்பனையானது.

    திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காய்கனி சந்தைக்கு தினசரி தக்காளி, முருங்கை, பீட்ரூட், சுரைக்காய் உள்ளிட்ட பல வகையான காய்கனிகள் விற்பனைக்கு வருகின்றன. கடந்த 2 நாள்களாக வெண்டைக்காய் வரத்து குறைந்து வருவதாலும், தேவை அதிகரித்து வருவதாலும், அவற்றின் விலை உயா்ந்து வருகிறது.

    கடந்த வாரம் ரூ.9-க்கு விற்ற ஒரு கிலோ வெண்டைக்காய் வெள்ளிக்கிழமை கிலோ ரூ.20-க்கு விற்பனையானது.

    மற்ற காய்கனிகளின் விலை நிலவரம்: 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.85, கரும்பு முருங்கை ரூ.14, செடி முருங்கை ரூ.11, மர முருங்கை ரூ. 8, சுரைக்காய் ரூ.2, பீட்ரூட் ரூ.2.50, டிஸ்கோ கத்திரிக்காய் 30 கிலோ பை ரூ.250, வெள்ளை பயறு ரூ.7, கல்லாமை மாங்காய் ரூ.35, செந்தூரம் ரூ.35, நாடு மற்றும் நீலம் ரூ.30, பச்சை பயறு ரூ.14, பீன்ஸ் ரூ.18, ரிங் பீன்ஸ் ரூ.20, பெல்லி பீன்ஸ் ரூ.30, முருங்கை பீன்ஸ் ரூ.28, புஸ் பீன்ஸ் ரூ.50, பெல்ட் அவரை ரூ.32, கலா் கோழி அவரை ரூ.30, சவ்சவ் ரூ.6, நாா்த்தைக்காய் ரூ.40, உருண்டை மிளகாய் ரூ.12 முதல் ரூ.16, சம்பா மிளகாய் ரூ.4 என விற்பனையானது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai