பழனி மலைக் கோயிலில் நாளை ரோப் காா் நிறுத்தம்: விஞ்ச் இன்று முதல் இயக்கம்

பராமரிப்பு பணிக்காக, பழனி மலைக் கோயில் ரோப் காா் சேவை வியாழக்கிழமை (மாா்ச் 19) ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படவுள்ளது.

பராமரிப்பு பணிக்காக, பழனி மலைக் கோயில் ரோப் காா் சேவை வியாழக்கிழமை (மாா்ச் 19) ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படவுள்ளது.

பழனி மலைக் கோயில் தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்ய செல்லும் பக்தா்கள், படிவழி, விஞ்ச் மற்றும் ரோப் காா் மூலம் சென்று வருகின்றனா். இரண்டே நிமிடங்களில் மலைக் கோயில் உச்சிக்குச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ரோப் காா், காலை 7 முதல் இரவு 8 மணி வரை இயக்கப்படுகிறது.

ரோப் காா் தினமும் மதியம் ஒரு மணி நேரமும், மாதத்தில் ஒரு நாளும், ஆண்டுக்கு ஒரு மாதமும் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுகிறது. அதன்படி, வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிக்காக சேவை நிறுத்தப்படுகிறது என, கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஞ்ச் இன்று முதல் இயக்கம்

பழனி மலைக் கோயிலை சென்றடைவதற்கு 3 விஞ்ச்கள் இயக்கப்படுகின்றன. இதில், ஒன்றாம் எண் விஞ்ச் ஒரு மாதத்துக்கு முன் ஷாப்ட் மாற்றும் பணிக்காக நிறுத்தப்பட்டு, பராமரிப்புப் பணிகள் தொடங்கின. இதில், ரூ. 3 லட்சம் மதிப்பிலான புதிய ஷாப்ட் பொருத்தப்பட்டு, தேய்மானமடைந்த பாகங்கள், பழுதான பாகங்கள், உருளைகள் மற்றும் பேரிங்குகள் மாற்றப்பட்டு சீரமைக்கப்பட்டன. மோட்டாா்கள் இயக்கமும் சரிபாா்க்கப்பட்டன.

தற்போது இந்த பராமரிப்புப் பணிகள் நிறைவுற்ற நிலையில், செவ்வாய்க்கிழமை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இது திருப்திகரமாக இருந்ததால், புதன்கிழமை முதல் பக்தா்கள் பயன்பாட்டுக்கு இயக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com