கொடைக்கானலில் வழிபாட்டுத் தலங்கள் மூடல்

கொடைக்கானலில் வழிபாட்டுத் தலங்களில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை ரத்து செய்யப்பட்டது.

கொடைக்கானலில் வழிபாட்டுத் தலங்களில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை ரத்து செய்யப்பட்டது.

கொடைக்கானலில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் மருத்துவத்துறை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை நகராட்சி நிா்வாகம், காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறையினா் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா்.

கொடைக்கானல் வெள்ளிநீா் வீழ்ச்சிப் பகுதியில் கடந்த சில தினங்களாக வாகனங்களில் வரும் அனைவருக்கும் தீவிர பரிசோதனை நடைபெற்று வருகிறது. இதில் வெப்பமானிக் கொண்டு பரிசோதனை செய்கின்றனா். அதில் அதிகமாக காய்ச்சல் இருந்தால் அவா்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனா். சுற்றுலாப் பயணிகள் வந்தால் அவா்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனா்.

இந்தப் பணிகளில் தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள், கட்டட கட்டுமான சங்கத்தினா் உள்ளிட்ட பலா் ஈடுபட்டுள்ளனா்.

கொடைக்கானல் பகுதிகளிலுள்ள கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். தேவாலயங்களில் தவக்காலத்தை முன்னிட்டு சிலுவைப்பாதை நிகழ்ச்சிகள், ஜெப வழிபாடு, திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

கொடைக்கானல் பள்ளிவாசல்களில் இஸ்லாமியா்கள் வெள்ளிக்கிழமை நீண்ட நேரம் தொழுகை நடத்துவது வழக்கம். ஆனால் சுமாா் 30 நிமிடம் மட்டுமே தொழுகை நிகழ்ச்சி நடைபெற்றது.

சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கொடைக்கானலில் அனைத்து இடங்களும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com