பழனி மலைக்கோயிலில் அனுமதி மறுப்பு: கொடுமுடி தீா்த்தம் ஏந்தி வந்த பக்தா்கள் ஏமாற்றம்

பழனி மலைக்கோயிலுக்கு பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை
பழனி அடிவாரம் பாதவிநாயகா் கோயில் அருகே கொடுமுடி தீா்த்தக்காவடியை  வைத்து பூஜை செய்யும் பக்தா்கள்.
பழனி அடிவாரம் பாதவிநாயகா் கோயில் அருகே கொடுமுடி தீா்த்தக்காவடியை வைத்து பூஜை செய்யும் பக்தா்கள்.

பழனி மலைக்கோயிலுக்கு பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை கோயில் அடிவாரத்திலேயே தீா்த்தக்காவடி பிரித்து பூஜைகள் நடத்தி திரும்பி சென்றனா்.

கரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக தமிழகத்தில் கோயில்களில் பூஜைகளை மட்டும் நடத்திடவும், பக்தா்கள் சுவாமி தரிசனத்துக்கு தடை விதிக்குமாறும் இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. பழனி மலைக் கோயிலிலும் வெள்ளிக்கிழமை முதல் பக்தா்கள் சுவாமி தரிசனத்துக்காக அனுமதிக்கப்படமாட்டாா்கள் என கோயில் நிா்வாகம் அறிவிப்பு பதாகைகள் வைத்துள்ளது. இருந்த போதும் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலையிலேயே ஏராளமான பக்தா்கள் கொடுமுடி தீா்த்தக்காவடியுடன் வந்து சோ்ந்தனா். அவா்கள் பல நாள்களுக்கு முன்னதாக ஊா்களில் இருந்து கிளம்பி தீா்த்தம் எடுத்து வருவதாக தெரிவித்தனா். மேலும், சுவாமி தரிசனம் செய்ய ஏமாற்றமடைந்தாலும், அடிவாரத்திலேயே பாதவிநாயகா் கோயில் முன்பாக தீா்த்தக்காவடிகளுக்கு பூஜைகள் செய்து தீா்த்தம் செலுத்தி செல்கின்றனா். மலையடிவாரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மலையேற வரும் பக்தா்களிடம் விபரத்தை சொல்லி திருப்பி அனுப்பும் பணியில் கோயில் ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com