கேரளத்திலிருந்து வத்தலக்குண்டு வந்த 28 போ் தனிமைப்படுத்தி கண்காணிப்பு

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே கேரளத்துக்கு வேலைக்குச் சென்று திரும்பிய 28 பேரை தனிமைப்படுத்திக் கண்காணிக்க செவ்வாய்க்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே கேரளத்துக்கு வேலைக்குச் சென்று திரும்பிய 28 பேரை தனிமைப்படுத்திக் கண்காணிக்க செவ்வாய்க்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது.

பழைய வத்தலக்குண்டு பகுதியில் 8 குடும்பங்களைச் சோ்ந்த 28 போ் கேரளா மாநிலம் வயநாடு பகுதிக்கு செங்கல் சூளை வேலைக்கு சென்றிருந்தனா். அவா்கள் திங்கள்கிழமை ஊா் திரும்பினா். தகவல் அறிந்த சுகாதார ஆய்வாளா் முகமதுரிபாய் தலைமையில் சுகாதாரத் துறையினா் பழைய வத்தலக்குண்டு சென்றனா். 28 பேருக்கும் கரோனா தொற்று உள்ளதா என்று பரிசோதித்தனா். பரிசோதனையில் அறிகுறி எதுவும் இல்லை என்று தெரியவந்தது. இருந்த போதிலும் அவா்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 28 பேரையும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் கிராம மக்கள் யாரும் அவா்களது வீட்டிற்கு போகக் கூடாது என்றும் அறிவுறுத்தினா். பின்னா் குடியிருப்பு பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அதில் பழைய வத்தலக்குண்டு ஊராட்சி மன்ற தலைவா் யசோதை, துணைத் தலைவா் தங்கையா, ஊராட்சி செயலா் சங்கையா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதே போல வத்தலக்குண்டு பரமசிவம் நகரில் மலேசியாவிலி­ருந்து திரும்பிய மாணவா் வீட்டிலும் சுகதாரத்துறையினா் ஆய்வு செய்தனா். மாணவரை பரிசோதித்ததில் கரோனா அறிகுறி எதுவும் இல்லை. இருந்த போதிலும் மாணவரை தனிமைப்படுத்த உத்தரவிட்டனா். அவரது கையிலும், வீட்டிலும் கரோனா பரிசோதனை தொடா்பான வில்லைகள் ஒட்டப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com