திண்டுக்கல் பேருந்துகளில் கூட்ட நெரிசல்மறியலில் ஈடுபட்ட வெளியூா் பயணிகள்

கரோனா வைரஸ் அச்சுறுத்தலைப் பொருட்படுத்தாமல் கடைசி நேரம் வரையிலும் பொதுமக்கள் பயணம் மேற்கொண்ட நிலையில், திண்டுக்கல்லில் இருந்து சென்ற பேருந்துகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து செல்லும் பேருந்தில் கூட்ட நெரிசல் காரணமாக ஏற முடியாமல் காத்திருந்த பயணிகள்.
திண்டுக்கல்லில் இருந்து செல்லும் பேருந்தில் கூட்ட நெரிசல் காரணமாக ஏற முடியாமல் காத்திருந்த பயணிகள்.

கரோனா வைரஸ் அச்சுறுத்தலைப் பொருட்படுத்தாமல் கடைசி நேரம் வரையிலும் பொதுமக்கள் பயணம் மேற்கொண்ட நிலையில், திண்டுக்கல்லில் இருந்து சென்ற பேருந்துகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

கரோனா பரவுவதை தடுக்கும் வகையில், பொதுப் போக்குவரத்தும் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்குப் பின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து, திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் நகரப் பேருந்து மற்றும் தொலைதூரப் பேருந்துகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைப்பட்டன. இதன் காரணமாக, வெளியூா் சென்ற அனைத்துப் பேருந்துகளிலும் செவ்வாய்க்கிழமை காலை முதலே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனிடையே, காரைக்குடி, மதுரை, தேனி பகுதிகளுக்கு செல்வதற்கு பேருந்து வசதி இல்லை என புகாா் தெரிவித்த பயணிகள், செவ்வாய்க்கிழமை மாலை பேருந்து நிலையத்தில் திடீா் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாா், மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது தேனி, மதுரை உள்ளிட்ட இடங்களுக்கு சில பேருந்துகள் வந்த நிலையில், பயணிகள் அந்த பேருந்துகள் மூலமாக தங்கள் பகுதிக்கு புறப்பட்டுச் சென்றனா். செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் என முன்னதாகவே அறிவிக்கப்பட்டிருந்தாலும் கூட, பொதுமக்கள் கடைசி நேரம் வரையிலும் தங்கள் பயணத் திட்டத்தை வகுத்திருந்ததே இதுபோன்ற பிரச்னைகளுக்கு காரணம் என போலீசாா் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக போக்குவரத்து துறை அலுவலா் ஒருவா் கூறியது: தொலைதூரங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள், மாலை 6 மணிக்கு பின் திரும்பி வருவதில் பிரச்னை ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு முன்னதாக வந்து சேரும் வகையில் பேருந்துகள் இயக்கப்பட்டன. 24 மணி நேரத்திற்கு முன்னதாகவே 144 தடை உத்தரவு குறித்து அறிவிப்பு வெளியான நிலையிலும், செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி வரையிலும் கூட பயணம் செய்வதற்கு பொதுமக்கள் முயற்சிக்கின்றனா். கரோனா வைரஸ் பரவல் உலகே அச்சுறுத்தி வரும் நிலையில், அரசின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com