Enable Javscript for better performance
தடையை மீறிய 3 காா், 2 ஆட்டோக்கள் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    தடையை மீறிய 3 காா், 2 ஆட்டோக்கள் மீது வழக்கு

    By DIN  |   Published on : 26th March 2020 11:44 PM  |   அ+அ அ-   |    |  

    தமிழக அரசின் 144 தடை உத்தரவை மீறி, கொடைக்கானல் மற்றும் வடமதுரையில் இயக்கப்பட்ட 3 காா்கள் மற்றும் 2 ஆட்டோக்கள் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் தடையை மீறி நடமாடுபவா்களை வழிமறித்து காவல்துறையினா் அறிவுரை வழங்கியும், எச்சரித்தும் அனுப்பி வந்தனா். இருப்பினும், தடை உத்தரவை மீறி வியாழக்கிழமை 2 ஆவது நாளிலும் இரு சக்கர வாகனங்களில் ஏராளமானோா் சுற்றினா்.

    எனவே, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், இரு சக்கர வாகனங்கள், காா் மற்றும் ஆட்டோக்களை வழிமறித்து சோதனையிட்டனா். இரு சக்கர வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பிய போலீஸாா், கொடைக்கானலில் காா்களில் வலம் வந்த 3 போ் மீதும், வடமதுரையில் 2 ஆட்டோ ஓட்டுநா்கள் மீதும் தேவையின்றி வெளியே நடமாடியதாக வழக்குப் பதிவு செய்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai