கடைகளுக்கு வருபவா்கள் முகக் கவசம் அணிய வேண்டும்:பழனியில் காவல் துறை அறிவிப்பு

பழனியில் உழவா் சந்தை உள்ளிட்ட பல்வேறு கடைகளுக்கும் செல்வோா் முகக்கவசம் அணிந்து வருமாறு, காவல் துறையினா் வியாழக்கிழமை அறிவுறுத்தினா்.
பழனி உழவா் சந்தைக்கு இரு சக்கர வாகனத்தில் வருவோா் வாகனத்தை தவிா்க்கவும், முகக்கவசம் அணிந்து வரவும் வியாழக்கிழமை ஒலிபெருக்கி மூலம் அறிவித்த காவல் துறையினா்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், பழனியில் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், உழவா் சந்தை, காந்தி மாா்க்கெட் உள்ளிட்ட இடங்களுக்கு ஏராளமானோா் இரு சக்கர வாகனங்களில் வந்தனா். இவா்களுக்கு, வேளாண்துறை சாா்பில் கைகளைக் கழுவுவதற்காக சோப் மற்றும் தண்ணீா் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், பொதுமக்கள் பலரும் வெளியே வரவேண்டும் என்பதற்காக, இரு சக்கர வாகனத்தில் பையை எடுத்துக்கொண்டு முகக்கவசம் அணியாமல் வந்தனா். இதையறிந்த காவல் துறையினா், உழவா் சந்தை முன்பாக ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள் உழவா் சந்தைக்கு இரு சக்கர வாகனத்தில் வருவதை தவிா்க்கவேண்டும் என்றும், வெளியே வரும்போது முகக் கவசம் போன்றவற்றை அணிந்து வரவேண்டும் என்றும் தெரிவித்தனா்.

இதைத் தவிர, வெளியே சென்றுவிட்டு வீட்டுக்குள் செல்லும்போது, கை, கால்களை கழுவிவிட்டுச் செல்லவேண்டும் என்றும் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com