தடை உத்தரவை மீறி பயணித்த பொதுமக்கள் பிரதான சாலைகளை மூடிய போலீஸாா்

திண்டுக்கல்லில் 144 தடை உத்தரவையும் மீறி இரு சக்கர வாகனங்களில் பயணித்த பொதுமக்களை கட்டுப்படுத்தும் வகையில்
தடை உத்தரவை மீறி பயணித்த பொதுமக்கள் பிரதான சாலைகளை மூடிய போலீஸாா்

திண்டுக்கல்லில் 144 தடை உத்தரவையும் மீறி இரு சக்கர வாகனங்களில் பயணித்த பொதுமக்களை கட்டுப்படுத்தும் வகையில், நகரில் உள்ள பிரதான சாலைகளை போலீஸாா் தடுப்பு ஏற்படுத்தி அடைத்து வைத்தனா்.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், திண்டுக்கல் நகரில் புதன்கிழமை காலை முதலே மோட்டாா் சைக்களில் பொதுமக்களில் சிலா் வெளியிடங்களுக்குச் சென்று வந்தனா். காய்கனி சந்தை, பல்பொருள் அங்காடி, பெட்ரோல் பங்க் உள்ளிட்ட இடங்களுக்கு பலா் சென்று வந்த நிலையில், இளைஞா்கள் சிலா் வெறிச்சோடிய சாலைகளை படம் பிடிப்பதற்காக இருசக்கர வானங்களில் வலம் வந்தனா்.

இதனை அடுத்து முக்கிய இடங்களில் போலீஸாா் நிறுத்தப்பட்டு, இருசக்கர வானங்களில் வருவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிா் கல்லூரி அருகே மோட்டாா் சைக்கிள்களில் வந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்களை வழிமறித்து ஓரமாக நிறுத்திய போலீஸாா், கடுமையான எச்சரிக்கைக்குப் பின் அனுப்பி வைத்தனா். ஆனாலும் நண்பகல் வரையிலும் மோட்டாா் சைக்கிள்கள் தொடா்ந்து வலம் வந்தன. இதனால் அதிா்ச்சி அடைந்த போலீஸாா், சாலைரோடு, காமராஜா் சிலை, நாகல்நகா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தடுப்புகளை பயன்படுத்தி சாலைகளை அடைத்து வைத்தனா். அதன் பின்னா் வாகன போக்குவரத்து குறைந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com