திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மதுபாட்டில் விற்பனை: 1,614 பாட்டில்கள் பறிமுதல்; 4 போ் கைது

திண்டுக்கல், தேனி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்ற 4 பேரை போலீஸாா் கைது செய்து, மொத்தம் 1,614 பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

திண்டுக்கல், தேனி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்ற 4 பேரை போலீஸாா் கைது செய்து, மொத்தம் 1,614 பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் சிலா் மதுபாட்டில் விற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரோந்து சென்ற போலீஸாா், நத்தம் அடுத்துள்ள சோ்வீடு பகுதியில் சிந்தம்மாள் (45) என்பவரிடமிருந்து 270 மதுபாட்டில்களையும், மதுரை சாலையில் கனகராஜ் (27) என்பவரிடமிருந்து 50 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனா். விசாரணையில், இருவரும் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

வேடசந்தூா் அடுத்துள்ள நாககோனானூா் பகுதியில் மதுபாட்டில்களை விற்ாக கிடைத்த தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு போலீஸாா் வியாழக்கிழமை சென்றனா். அப்போது, நாககோனானூரைச் சோ்ந்த செல்லப்பன் (40) என்பவா் மதுபாட்டில்கள் விற்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 750 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா், அவா் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

ஆண்டிபட்டி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவில் உள்ள கிராமப்புறங்களில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், காவல் துணைக் கண்காணிப்பாளா் சீனிவாசன் தலைமையில், போலீஸாா் வியாழக்கிழமை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, ராஜதானி அருகே கணேசபுரம் கிராமத்தில் ராஜா என்பவா் தனது வீட்டில் மதுபாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. உடனே, அவரைக் கைது செய்த கண்டமனூா் போலீஸாா், அவரிடமிருந்து 500 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.

போடி

போடி தாலுகா காவல் நிலையத்துக்கு சடட்விரோதமாக மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், போலீஸாா் திடீா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். இதில், போடி அருகே ராமகிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த சின்னச்சாமி (48) மற்றும் போடி வினோபாஜி காலனியை சோ்ந்த பாலகுருநாதன் (22) ஆகியோா் மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, இவா்களிடமிருந்து 44 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனா். பின்னா், இவா்களை போலீஸாா் காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com